முல்லைத்தீவு - புதுகுடியிருப்பில் பல கலைச்சேவைகளை செய்யும் கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு புதுகுடியிருப்பு பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது, முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு கலைச்சேவைகள் செய்த கலைஞர்கள் கௌரவப்படுத்தப்பட்டதுடன், இந்திய துணைத்தூதுவர் ஆ. நடராஜன் சேவையினை பாரட்டியும் மதிப்பளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை யோகாப் பயிற்சிக்கல்லூரியின் ஏற்பாட்டில் நிகழ்வில் இந்திய துனணத்தூதுவர் ஆ. நடராஜன், வடமாகாண விவாசாய அமைச்சர் கந்தைய சிவநேசன், புதுகுடியிருப்பு பிரதேச செயலர் ம. பிரதீபன், கரைதுரைப்பற்று பிரதேச செயலர் சி. குணபாலன் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.