எரிபொருள் விநியோக மையத்தின் ஊழியர்கள் வேலை நிறுத்தம்?

Report Print Aasim in சமூகம்
103Shares

கொலன்னாவை எரிபொருள் விநியோக மையத்தின் ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம் மேற்கொள்ளப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் ஏனைய ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள உயர்வு தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என கொலன்னாவை விநியோக மைய ஊழியர்கள் கோரி வருகின்றனர்.

அத்துடன், ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக ஊழியர் சங்கங்கள் மூலம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை.

இது தொடர்பாக நிர்வாகத் தரப்பினருடன் பேச்சுவார்த்தையொன்று செவ்வாய்கிழமை மாலை ஏற்பாடாகி இருந்ததாக அறிவித்துள்ள ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் குறித்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாது போனால் புதன் கிழமை தொடக்கம் வேலைநிறுத்தத்தில் குதிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இவர்களுடன் சேர்ந்து நாடு தழுவிய ரீதியில் உள்ள 12 விநியோக மையங்களின் ஊழியர்களும் நாளை வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.