அரசாங்கம் மாணவர் அமைப்புகளை அடக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

Report Print Aasim in சமூகம்

நல்லாட்சி அரசாங்கம் மாணவர் அமைப்புகளை அடக்க முயற்சிப்பதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் பதில் ஒருங்கிணைப்பாளர் ஜீனரத்ன தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.

மருத்துவ மாணவர்களுக்கான குறைந்த பட்ச தகுதியை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்யுமாறு கோரி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்பின் சார்பில் செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பு கோட்டையில் ஆர்ப்பாட்ட பாதயாத்திரை நடைபெற்றது.

இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் உரையாற்றிய பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் பதில் ஒருங்கிணைப்பாளர் ரத்கரவ்வே ஜீனரத்ன தேரர், அரசாங்கம் பல்கலைக்கழக மாணவர்களை அடக்கி யொடுக்கி சைட்டம் கல்லூரியை பாதுகாக்க முயற்சிக்கின்றது.

ஆனால் சைட்டம் கல்லூரி ரத்துச் செய்யப்பட்டு மூடப்படும் வரை எமது போராட்டம் தொடரும்.

அதே போன்று மருத்துவக் கல்வி மாணவர்களுக்கான குறைந்த பட்ச தகுதியை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலும் ரத்துச் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.