பேருந்தில் குண்டு வெடிப்பிற்கு இதுவே காரணம்: சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Report Print Ajith Ajith in சமூகம்

தியத்தலாவையில் தனியார் பேருந்தில் பயணித்த இராணுவச் சிப்பாய் ஒருவர் வைத்திருந்த கைக்குண்டு ஒன்று வெடித்ததன் காரணமாக குறித்த வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

தியத்தலாவை – கஹகொல்ல பகுதியில் நேற்று அதிகாலை 5.45 மணியளவில் தனியார் பேருந்து ஒன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவமொன்றில் 7 இராணுவத்தினரும், 5 கடற்படையினரும், ஏழு பொதுமக்கள் அடங்கலாக 19பேர் காயமடைந்தனர்.

இந்த நிலையில், குறித்த சம்பவமானது, இராணுவச் சிப்பாய் ஒருவர் வைத்திருந்த கைக்குண்டு ஒன்று வெடித்ததில் இந்த அனர்த்தம் நேர்ந்திருக்கலாம் விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகிப்பமாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.