கடந்த வரவு செலவுத்திட்டத்தில் அரசாங்கம் பியருக்கான வரியைக் குறைத்ததன் காரணமாக இலங்கையில் பியர் பாவனை 12 வீதத்தால் அதிகரித்துள்ளது.
மதுவரித்திணைக்களம் கடந்த மாதங்களில் வெளியிட்ட தரவுகளின் மூலம் இந்த விடயம் வெளிவந்துள்ளதாக புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது.
நாட்டில் மொத்த மதுபாவனையில் 18 வீதம் பியர் நுகர்வு காணப்படுகின்றது. இந்த வீதம் அதிகதிக்கும் அபாயம் காணப்படுவதாகவம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகார சபையின் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பியர் நுகர்வு அதிகரித்தமை தொடர்பான அறிக்கை ஜனாதிபதிக்கும் சுகாதார அமைச்சருக்கும் அனுப்பிவைக்கப்படவுள்ளது.