சிறுவனை கடுமையாக தாக்கிய ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி

Report Print Steephen Steephen in சமூகம்

சிறுவனை தாக்கிய சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவரை சிலாபம் தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சிலாபம் ஜேமீஸ் வீதியில் வசித்து வரும் 14 வயதான ஓஷார ஹர்ஷமால் என்ற சிறுவனை, சந்தேகநபர் கடுமையாக தாக்கியதாக சிலாபம் பொலிஸாருக்கு இரகசிய முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

இந்த இரகசிய முறைப்பாட்டை அடுத்தே சந்தேகநபரை இன்றைய தினம் கைதுசெய்ததாக பதில் பொலிஸ் பரிசோதகர் ஏ.எஸ்.எம். ரஃபாய் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிறுவன் மேலும் இரண்டு பேருடன் மூங்கில் செடி ஒன்றை வெட்ட சென்றிருந்த போதே சந்தேகநபரின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான சிறுவன் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி இன்று சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.