இலங்கையிலிருந்து சென்றவர் மதுரை விமான நிலையத்தில் கைது

Report Print Shalini in சமூகம்

இலங்கை மற்றும் மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்திச் சென்றவர்கள் மதுரை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த இம்ரான்கான் என்பவர் இலங்கையிலிருந்து மைக்ரோவேவ் அவனின் உட்புறமாக தங்கத்தை மறைத்து கடத்தி வந்துள்ளார்.

இவரிடமிருந்து 814 கிராம் தங்கத்தை மதுரை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

அதேபோன்று மலேசிய விமானத்தில் வந்த திருச்சியைச் சேர்ந்த அபூபக்கர் சித்திக் என்பவரின் உடமைகளை சோதனை செய்த அதிகாரிகள் 750 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

கடத்தப்பட்ட தங்கத்தின் மதிப்பு 50 இலட்ச ரூபாய் என்று கூறப்படுகிறது.

இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், ஹவாலா பணம் மூலம் வெளிநாடுகளில் வாங்கப்படும் இது போன்ற தங்கக் கட்டிகளை விமானம் வழியாக கொண்டு வந்து உரியவரிடம் ஒப்படைத்தால், 2 இலட்ச ரூபாய் வரை பணம் கிடைக்கும் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து இம்ரான்கான், சித்திக் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.