தியத்தலாவ சம்பவம் குறித்து இராணுவமும் விசாரணை நடத்துகிறது

Report Print Steephen Steephen in சமூகம்

தியத்தலாவ பிரதேசத்தில் பேருந்தில் கைக்குண்டு வெடித்த சம்பவம் தொடர்பாக இலங்கை இராணுவமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொலிஸாரும் சம்பவம் குறித்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்களில் இராணுவத்தினரும் இருப்பதால், சம்பவம் தொடர்பாக தாமும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இராணுவ பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவ தலைமையகமும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது எனவும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.