மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி: மூவர் படுகாயம்

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியானதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரதான வீதியில் பயணித்த இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது, புணாணை ரிதிதென்னை மீராசாஹிபு வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய முகம்மட் ரசாக் றிபான் என்பவரே உயிரிழந்ததுள்ளார்.

மேலும், 23 வயதுடைய இஸ்மாயில் அஷ்வர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், துலக்ஷன், மற்றும் நாகையா ஜனுசன் ஆகியோர் படுகாயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்.

Latest Offers