இலங்கைக்கு இயந்திரங்களை கடத்திய இந்தியர்கள்! 10 ஆண்டுகளுக்கு பின் தண்டனை

Report Print Shalini in சமூகம்

சென்னையில் இருந்து இலங்கைக்கு மோட்டார் இயந்திரங்களை (Motor Engine) கடத்த முயற்சித்த தமிழர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு பின் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி குற்றம் சுமத்தப்பட்ட 3 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

சென்னையை சேர்ந்த குமரகுருபரன், ஜெயசீலன் மற்றும் இராமநாதபுரத்தை சேர்ந்த சாமிதுரை ஆகிய மூவருக்குமே தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து 7 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள மோட்டார் இன்ஜின்களை 2008ஆம் ஆண்டு இலங்கைக்கு கடத்த முயன்றுள்ளனர்.

இதன்போது புதுக்கோட்டை கியு பிரிவு பொலிஸ் ஆய்வாளர் முருகன் தலைமையிலான பொலிஸார் அவர்களை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.