சீ.ஐ.டியினரிடம் வாக்குமூலம் வழங்குமாறு கடற்படை அதிகாரிக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்

Report Print Steephen Steephen in சமூகம்

10 இளைஞர்களை கடத்திச் சென்று காணாமல் போக செய்த சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் ஒன்றை வழங்குமாறு கடற்படை அதிகாரி அட்மிரல் ஆனந்த குருகேவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் இருந்து வேறு பிரிவுக்கு மாற்றுமாறு சந்தேக நபர்களின் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை நிராகரித்த நீதவான், சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

Latest Offers