திருமணம் செய்துகொள்ள இலங்கை வந்த யுவதிக்கு ஏற்பட்ட நிலை!

Report Print Steephen Steephen in சமூகம்

வெளிநாட்டில் தொழில் புரிந்து விட்டு திருமணத்திற்காக நாடு திரும்பிய யுவதியின் கூந்தல் இல்லாமல் போனதால், திருமணத்தை ஒத்திவைத்த சம்பவம் ஒன்று மலையகத்தில் உள்ள கிராமம் ஒன்றில் நடந்துள்ளது.

மத்திய கிழக்கு நாடொன்றில் மூன்று வருடங்களாக வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிந்த யுவதி, தனது சகோதரி பார்த்து வைத்திருந்த இளைஞனை திருமணம் செய்வதற்காக தான் சம்பாதித்த பணம் மற்றும் பொருட்களுடன் நாடு திரும்பியுள்ளார்.

தனது எதிர்கால கணவனின் உறவினர்கள் தன்னை பெண் பார்க்க சகோதரியின் வீட்டுக்கு வரவுள்ளதால், யுவதி ஆயிரம் கனவுகளுடன் சகோதரியின் வீட்டுக்கு வந்துள்ளார்.

வீட்டுக்கு வந்த யுவதி, தனது சகோதரியின் பெண் குழந்தைகளுடன் உறங்கியுள்ளார்.

யுவதி உறக்கத்தில் இருப்பதால், சிறுமிகள் தமது தனிமையை போக்கிக்கொள்ள வீட்டில் இருந்த சீப்பு மற்றும் கத்தரிகோலை எடுத்து சிகையலங்காரம் செய்யும் விளையாட்டை விளையாடியுள்ளதுடன் சித்தியின் நீண்ட கூந்தலை கத்தரித்துள்ளனர்.

சிறிது நேரத்தின் பின் நித்திரையில் விழித்த யுவதி தனது கூந்தலுக்கு நேர்ந்த கதியை கண்டு வெட்கத்துக்கு உள்ளாகியுள்ளதுடன் திருமணத்தை ஒத்திவைத்துள்ளார்.

வீட்டில் இருந்து வெளியில் வர முடியாத நிலையில் யுவதி இருப்பதாக கூறப்படுகிறது.