மட்டக்களப்பு யுவதிகளின் உற்பத்திப் பொருட் கண்காட்சியும் விற்பனை நிகழ்வும்

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு, மண்முனை மேற்கு , வவுணதீவு பிரதேச செயலக தையல் பயிற்சி நிலையத்தில் தையல் தொழில் பயிற்சியினை நிறைவு செய்த யுவதிகளின் உற்பத்திப் பொருட் கண்காட்சியும் விற்பனை நிகழ்வும் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

வவுணதீவு மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் குறித்த கண்காட்சி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

கடந்த ஆண்டில் தையல், ஐசிங்கேக், கைப்பணிப் பொருட்கள் மற்றும் ஆடை அலங்காரம் போன்றவை தொடர்பான ஒரு வருட டிப்ளோமா பயிற்சி நெறியினை நிறைவு செய்த யுவதிகளே இக் கண்காட்சியிலும் விற்பனை நிகழ்விலும் ஈடுபட்டுள்ளனர்.

கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். அரசகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ். சுதாகர், திட்டமிடல் பணிப்பாளர் ரி. நிர்மலராஜ், கிராம சேவகர்களின் நிர்வாக உத்தியோகஸ்தர், நிர்வாக உத்தியோகத்தர், சிரேஸ்ட தையல் போதனாசிரியை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.