கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி

Report Print Nesan Nesan in சமூகம்

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டுப்போட்டி நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

பாடசாலையின் அதிபர் செபமாலை சந்தியாகு தலைமையில், பாடசாலை மைதானத்தில் குறித்த விளையாட்டுப்போட்டி இடம்பெற்றுள்ளது.

இதன்போது, மத்தியூஸ், டொரத்தியா, இம்மானுவேல், மேபிள் ஆகிய இல்லங்கள் பங்குபற்றியிருந்ததுடன், இதில் மத்தியூஸ் அணி முதலாம் இடத்தையும், இரண்டாம் இடத்தை டொரத்தியா இல்லமும் பெற்றுக்கொண்டன.

மேலும் குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித வணிகசிங்க கலந்து கொண்டதுடன், அதிதிகளாக, பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் (DIG) நுவாண் வெதசிங்க, கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் அப்துல் ஜலில் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன், கல்முனை பிரதேச செயலாளர் கே.லவநாதன், கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்தியட்சகர் இரா.முரளீஸ்வரன், கல்முனை தமிழ் கோட்டக் கல்வி அதிகாரி ஆர் திரவியராஜா ஆகியோரும் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers