வடக்கு முதல்வரினால் வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு திறந்து வைப்பு

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா - புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு கட்டடத்தினை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் திறந்து வைத்துள்ளார்.

இந்த கட்டடம் சுமார் 26 மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ச.சிவமோகன், வடமாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ்வரன், பிராந்திய சுகாதார சேவை உதவிப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி மகேந்திரன், வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் கு.அகிலேந்திரன் மற்றும் வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.