பொதுமக்களை ஏமாற்றி வியாபாரம் செய்த இருவருக்கு விளக்கமறியல்

Report Print Theesan in சமூகம்

வவுனியா - நெளுக்குளம் ஊர்மிலாகோட்டம் பகுதியில் சீனிப்பாணியை காய்ச்சி தேன் என்று கூறி வியாபாரம் செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரையும் ஓமந்தை பனிக்க நீராவி பகுதியில் வைத்து நேற்று சுகாதாரப் பரிசோதகர்கள் கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் இருந்து 27 சீனிப்பாணி போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. என்பது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அவர்களை விசாரணைக்கு உட்படுத்தியபோது நெளுக்குளம், ஊர்மிலாகோட்டம் பகுதியிலிருந்து எடுத்து வந்து பல இடங்களில் இவ்வாறு விற்பனை செய்து வருவதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சுகாதாரப்பரிசோதகர் கே. சிவரஞ்சன் மேலும் தெரிவித்துள்ளார்.