வவுனியாவில் திடீரென மின்சாரம் துண்டிப்பு: நோயாளர் அவதி

Report Print Theesan in சமூகம்

வவுனியா - பூந்தோட்டம், மகாறம்பைக்குளம், அண்ணாநகர் போன்ற பகுதிகளில் இன்று முன்னறிவித்தல் இன்றி திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு மின்சாரத்தின் உதவியுடன் வசித்துவரும் நபர் ஒருவர் பெரும் பாதிப்பனை எதிர்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இன்று காலை 8.30 மணிமுதல் பிற்பகல் 5 மணி வரையும் குறித்த பகுதியில் முன்னறிவித்தல் இன்றி மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

பல அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதில் இப்பகுதி மக்களுக்கு பெரும் நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை மகாறம்பைக்குளம் பகுதியிலுள்ள சிறுநீரகம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு வீட்டில் வைத்து மின்சாரத்தின் உதவியுடன் பரிசோதனை ஒன்று இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறு முன்னறிவித்தலின்றி மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதையிட்டு குறித்த நோயாளர் அவல நிலைக்குச் சென்றுள்ளதுடன் தனியார் ஒருவரிடம் மின்பிறப்பாக்கி வாடகைக்கு பெற்றுக் கொள்ளப்பட்டு அவருக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவ்வாறு மின்சாரத்தினை முன்னறிவித்தலின்றி நிறுத்தும்போது பலருக்கு அசௌகரிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவும் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.