முல்லைத்தீவில் நல்லாட்சி அரசின் கொடும்பாவி எரிப்பு

Report Print Shalini in சமூகம்

முல்லைத்தீவு, வட்டுவாகல் கடற்படை முகாமிற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் நல்லாட்சி அரசாங்கத்தின் கொடும்பாவி எரிக்கப்பட்டுள்ளது.

வட்டுவாகல் - கோத்தபாய கடற்படை முகாமுக்கு முன்னால் இந்த கொடும்பாவி எரிக்கப்பட்டுள்ளது.

வட்டுவாகல் கடற்படையினரின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை இன்றைய தினம் நில அளவீடு செய்யவிருந்த நிலையில் அவற்றை எதிர்த்து குறித்த மக்கள் ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர்.

இந்த போராட்டத்தில் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது நல்லாட்சி அரசாங்கத்தின் கொடும்பாவியை சுமந்து சென்று கடற்படைக்கு முன்னால் எரித்துள்ளனர்.