இலங்கை வந்த வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

ஹபராதுவ, சுற்றுலா ஹோட்டலில் தங்கியிருந்த வெளிநாட்டு பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய நாட்டு பெண் ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் 39 வயதானவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அதிகாலை ஹோட்டலுக்கு வந்த சந்தேக நபரினால், குறித்த வெளிநாட்டு பெண் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்னர் அவர் ஹபராதுவ பொலிஸாரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கு அமைய பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.