போராட்டம் நடத்திய மக்களை புகைப்படம் எடுத்த கடற்படையினர்

Report Print Mohan Mohan in சமூகம்

முள்ளிவாய்க்கால் கிழக்கு வட்டுவாகல் பகுதியில் எதிர்ப்பு போராட்டம் நடத்திய பொதுமக்களை கடற்படையினர் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தியுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

வட்டுவாகல் கோத்தபாய கடற்படை முகாம் காணிகளை நிரந்தரமாக கையகப்படுத்துவதற்காக இன்று அரச அதிகாரிகளினால் நில அளவீட்டு பணி தொடரப்பட்டபோது பொதுமக்கள் அதனை எதிர்த்து போராட்டத்தினை நடத்தியுள்ளனர்.

இதன்போதே கடற்படையினர் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அல்லாத சில நபர்கள் பொதுமக்களின் போராட்டத்தை வேறு திசைக்கு மாற்றி தமக்கு அச்சுருத்தல் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களை புகைப்படம் எடுத்துள்ளதாகவும் கடற்படை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் மாவட்ட அரச அதிகாரிகளின் வாக்குறுதிகளுக்கு அமைய பொதுமக்கள் தற்காலிகமாக தமது எதிர்ப்பு போராட்டத்தினை கைவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.