ஊடகவியலாளர்கள் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

Report Print Navoj in சமூகம்

கல்குடா - கும்புறுமூலைப் பகுதிக்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு எதிர்வரும் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஊடகவியலாளர்களை தாக்கியமை தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் நீதவான் முன்னிலையில் ஆஜராகியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணி ஆஜராகியிருந்ததுடன், வழங்கின் போது பொலிஸார் மன்றுக்கு அறிக்கையொன்றை வழங்கியிருந்தனர்.

கடந்த வருடம் 2017 மார் 22ஆம் திகதி நல்லதம்பி நித்தியானந்தன், புண்ணியமூர்த்தி சசிதரன் என்ற ஊடகவியலாளர்கள் கும்புறுமூலைப் பகுதியில் அமைக்கப்பட்ட மதுபானசாலை தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற போது அங்கிருந்தவர்களினால் தாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.