தேவாலயத்தினுள் கஞ்சா விற்பனை! பூசாரி கைது

Report Print Aasim in சமூகம்

தேவாலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த பூசாரி யொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி, இமதுவ பிரதேசத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இமதுவ, போகொட தேவாலயத்தில் குறி சொல்லும் பூசாரியொருவர் நீண்டகாலமாக அங்கு வரும் பக்தர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார்.

தகவலறிந்த பொலிஸார் குறித்த பூசாரி பொலிஸாரின் ரகசிய ஏஜண்ட் ஒருவருக்கு கஞ்சா விற்பனை செய்த சந்தர்ப்பத்தில் கையும் களவுமாக பிடித்துக் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து காலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பூசாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.