கையடக்க கணணிகளுக்கான நிதி கல்வி அபிவிருத்திக்கு பயன்பட வேண்டும்

Report Print Aasim in சமூகம்

கையடக்க கணணிகளுக்கான (டெப் கணணிகள்) நிதியை கல்வி அபிவிருத்திக்குப் பயன்படுத்த இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் கல்வித்துறை மறுமலர்ச்சிக்கு ஏராளமான பௌதீக வளங்கள் பற்றாக்குறையாக இருக்கும் நிலையில் மாணவர்களுக்கு கையடக்க கணணிகள் பகிர்ந்தளிக்க அரசாங்கம் தவறான முடிவொன்றை மேற்கொண்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே குறித்த நிதியை கல்வி மறுமலர்ச்சி மற்றும் பௌதீக வளத்தேவைகளுக்குப் பயன்படுத்தினால் அது ஆசிரியர்களுக்கு பேருதவியாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறில்லாத பட்சத்தில் குறித்த நிதியொதுக்கீடு திறைசேரிக்கு மீளப் பெறப்பட்டு வேறு செயற்திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.