வேட்டையாடச் சென்றவர்களுக்கு பெருந்தொகை அபராதம்

Report Print Aasim in சமூகம்

மாதுரு ஓயா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வேட்டையாடச் சென்றவர்களுக்கு பெருந்தொகை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மாதுரு ஓயா வனப்பிரதேசத்தில் நாட்டுத் துப்பாக்கிகளுடன் வேட்டையாடச் சென்ற நால்வர் வனப்பாதுகாவலர்களினால் கைது செய்யப்பட்டு தெஹிஅத்தகண்டிய நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்டனர்.

இதன்போது சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து நீதிபதி வசந்தா நவரத்ன சந்தேக நபர்களுக்கு தலா 55 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

நான்கு சந்தேக நபர்களுக்கும் மொத்தமாக இரண்டு இலட்சத்து 20 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வேட்டையாடச் சென்று கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு விதிக்கப்பட்ட அதிகூடிய அபராதத் தொகை இதுவாகும்.