மன்னாரில் திறன் வெளிப்பாட்டு சர்வமத கலை நிகழ்வு

Report Print Ashik in சமூகம்
25Shares

திறன் வெளிப்பாட்டு சர்வமத கலை நிகழ்வு மன்னார், வட்டக்கண்டல் அரசினர் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு நேற்று கறிற்ராஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில், வாழ்வுதய இயக்குனர் அருட்பணி ம.ஜெயபாலன் அடிகளார் தலைமையில் நடைபெற்றுள்ளது.

சர்வமத சகவாழ்வு எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற நிகழ்வானது கலை நிகழ்வுகளின் ஊடாக மாணவர்களின் திறன்களை வெளிக்கொணரும் நிகழ்வாக நடத்தப்பட்டுள்ளது.

மேலும், நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன், வட்டக்கண்டல் பாடசாலை அதிபர் அந்தோனி தேவதாஸ், சர்வமதத் தலைவர்களான மௌளவி அப்துல் ரகான் முகமட் ஜவாஸ், அளவக்கை பங்குத்தந்தை அருட்பணி சுரேந்திரன் றெவல், செட்டிகுளம் உதவிப்பங்குத்தந்தை பிறாங்டப், இந்துமத குருக்கள் சிவஸ்ரீ மு.றதிமாறன் உற்பட கிராம அலுவலகள்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்வுகளில் சர்வமதத்தையும் சார்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.