மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரவெட்டி பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இன்று அதிகாலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அதிகாலை வீட்டில் இருந்து சென்றவரே உயிரிழந்துள்ளதாகவும், சடலத்திற்கு அருகில் கட்டுத்துவக்கு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கரவெட்டியை சேர்ந்த 21வயதுடைய மன்மதன் அருள்ராஜ் என்பவரே சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.