குளிக்க சென்ற ஆறு இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி பலி

Report Print Mubarak in சமூகம்
71Shares

திருகோணமலை - மனையாவெளி கடற்கரையில் குளிக்கச்சென்ற ஆறு இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று மாலை 5.30 மணிளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இளைஞர்கள் ஆறு பேரும் கடலில் குளிப்பதற்காக சென்ற போது இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன், காணாமல் போனவரை தேடும் பணியில் கிராமத்தவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சாரணர் வீதியைச்சேர்ந்த இராசலிங்கம் சிந்துஜன் (16 வயது) என்பவரே உயிரிந்துள்ளாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை துறைமுக பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.