கடலில் மிதந்து வந்த போத்தல் ஒன்றிலிருந்த திரவத்தை அருந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யக்காமுல்ல - மாஹாகெதர என்னும் பிரதேசத்தைச் சேர்ந்த ரனபுரே ஹெவகே கயான் மதுசங்க 29 வயதான நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
அண்மையில் காலி துறைமுகத்தின் ஊடாக உயிரிழந்த நபர் உள்ளிட்ட 7 பேர் மீன்பிடிப் படகு மூலம் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர்.
இதன்போது கடலில் மிதந்து வந்த போத்தல் ஒன்றை இவர்கள் எடுத்துள்ளனர். இந்த போத்தலில் இருந்த திரவத்தை படகில் பயணித்த இரண்டு பேர் அருந்தியுள்ளனர்.
இதில் மதுசங்க என்பவர் கரைக்கு திரும்பும் முன்னதாகவே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.