பன்னிரு சிறுமிகள் துஷ்பிரயோகம்! இரண்டு பிக்குகள் உட்பட 8 பேர் கைது

Report Print Aasim in சமூகம்

நிகவெரட்டிய பிரதேசத்தில் சிறுவர் இல்லமொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த 12 சிறுமிகள் மீதான துஷ்பிரயோகம் தொடர்பில் 02 பிக்குகள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிகவெரட்டிய, ரஸ்நாயக்கபுர பிரதேசத்தில் இரண்டு பிக்குகளின் தலைமையில் சிறுவர் இல்லமொன்று நடத்தப்பட்டு வருகின்றது. அங்கு சிறுவர்கள் மட்டுமன்றி 12 சிறுமிகளும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சிறுவர் இல்லத்தின் பொறுப்பாளர்களான பிக்குமார் மற்றும் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் ஆறுபேர் ​சேர்ந்து சிறுமிகளை தொடர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வருவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்திருந்தது.

பொலிசாரின் விசாரணையில் சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட விடயம் உண்மை என்பது நிரூபணமானதை அடுத்து இரண்டு நாட்களுக்கு முன்னர் 07 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டனர்.

நேற்றைய தினம் தலைமறைவாகியிருந்த பிக்குவும் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் ஊடாக விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவர் இல்லம் கடந்த 1998ம் ஆண்டு தொடக்கம் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கண்காணிப்பில் இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.