கொத்மலை அணைக்கட்டுப் பாதை தற்காலிகமாக மூடப்பட்டது

Report Print Aasim in சமூகம்
49Shares

கொத்மலை அணைக்கட்டு மீதான பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக நீர்த்தேக்க பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

கொத்மலை நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு மீதான பாதை பொதுமக்கள் மற்றும் வாகனப் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் குறித்த அணைக்கட்டில் மேற்கொள்ளவுள்ள திருத்த வேலைகள் காரணமாக அணைக்கட்டுப் பாதையை தற்காலிகமாக மூடி போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கத்துக்குப் பொறுப்பான பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் இன்று தொடக்கம் எதிர்வரும் மூன்று நாட்கள் வரை இப்பாதை போக்குவரத்து தடை செய்யப்பட்டிருக்கும்.

இதன் காரணமாக நீர்த்தேக்கத்தைப் பார்வையிட வருவதைப் பொதுமக்கள் தவிர்த்து கொள்வதுடன், வாகன சாரதிகள் மாற்றுப் பாதைகளை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.