விவசாயிகளுக்கு பணத்துக்குப் பதில் பசளை வழங்க நடவடிக்கை

Report Print Aasim in சமூகம்
72Shares

விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரமானியத்துக்குப் பதில் நேரடியாக பசளை வகைகளை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

தற்போதைக்கு நெல் உள்ளிட்ட பல்வேறு விவசாயப் பயிர்ச்செய்கைகளுக்கு உரமானியம் வழங்கப்படுகின்றது. இதற்காக வருடந்தோறும் சுமார் 38 பில்லியன் ரூபா ஒதுக்கப்படுகின்றது.

எனினும் சந்தையில் பசளை வகைகளுக்கான தட்டுப்பாடு பாரியளவில் நிலவுகின்றது.

இந்நிலையில், உரமானியத்துக்குப் பதில் விவசாயிகளுக்கு நேரடியாக பசளை வகைகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கு வசதியாக வருடம் முழுவதற்கும் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் பசளைகளை சேகரித்து களஞ்சியப்படுத்தும் வசதிகளை ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.