7 கிலோ தங்கத்துடன் இருவர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்
55Shares

புத்தளம் கற்பிட்டி, கந்தக்குளி கடற்கரையில் ஒரு தொகை தங்கத்துடன் இரண்டு பேரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய டிங்கி படகு ஒன்றை சோதனையிட்ட போது தங்கத்துடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கமாண்டார் தினேஷ் பண்டார தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர்களிடம் இருந்து 7 கிலோ கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த தங்கத்தின் பெறுமதி 5 கோடி ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக சுங்க திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.