விறகு எடுக்கச் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Mohan Mohan in சமூகம்
293Shares

முள்ளிவாய்க்கால் பகுதியில் விறகு எடுக்கச் சென்ற நபர் ஒருவர் மரப்பொந்து ஒன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்றை இன்று கண்டுள்ளார்.

இந்த சம்பம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால், இரட்டைவாய்க்கால், அம்பலவன் பொக்கனை, புதுமாத்தளன் உள்ளிட்ட பிரதேசங்களில் இறுதியுத்தத்தின் போது கைவிடப்பட்ட அபாயகரமான வெடிபொருட்கள் காணப்படுவதாக அந்தப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.