தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு

Report Print Theesan in சமூகம்
263Shares

வவுனியா - கொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள (AFRIEL) அமைப்பின் விடுதியிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

குறித்த விடுதியில் தங்கியிருந்த இருவர் நேற்று மதுபானம் அருந்தியுள்ளனர். இரவு 7.00 மணியளவில் ஒருவர் வெளியே சென்றுள்ளார்.

இதன் போது குறித்த விடுதியில் இருந்த, 31 வயதுடைய ரகுநாதன் சுகிர்தரன் இருந்துள்ளார்.

இன்று காலை 9.30 மணியாகியும் சுகிர்தரன் அறையினை விட்டு வெளியே வராத காரணத்தினால் கதவினை உடைத்துள்ளனர். அதன்போது சுகிர்தரன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

உடனடியாக 119 அவசர பொலிஸ் இலக்கத்திற்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காதல் விவகாரத்தினால் குறித்த நபர் தூக்கில் தொங்கியிருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.