பதுளை, எல்ல நகரில் சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த சுவிட்ஸர்லாந்து பிரஜை திடீரென உயிரிழந்துள்ளார்.
70 வயதான சுவிட்ஸர்லாந்து பிரஜையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சுற்றுலா விடுதியின் ஊழியர் ஒருவர் அதிகாலையில் தேனீரை எடுத்துச் சென்று அறையின் அழைப்பு மணியை அடித்துள்ளார்.
எனினும் அறையில் இருந்து பதில் எதுவும் வரவில்லை. இதனையடுத்து விடுதியின் முகாமையாளர் அறையை திறந்து பார்த்த போது சுவிஸ் பிரஜை கட்டிலில் உறங்கிய நிலைமையில் பிணமாக கிடந்துள்ளார்.
சம்பவம் குறித்து எல்ல பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.