வட மாகாண சமூக சேவைகள் அமைச்சின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை!

Report Print Suman Suman in சமூகம்
36Shares

வடக்கு மாகாண சபையும், கிளிநொச்சி மாவட்டச் செயலகமும் இணைந்து நடத்தும் மாபெரும் நடமாடும் சேவை இன்று கிளிநொச்சி மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வு மாலை 4 மணி வரை கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நடைபெற்றவுள்ளது.

“மக்களை நோக்கிய சேவை” எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சி மாவட்ட மக்களின் நன்மை கருதி வட மாகாண மகளிர் விவகார, சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையில் இந்நடமாடும் சேவை இடம்பெற்றுகின்றது.

வட மாகாண சமூக சேவைகள் அமைச்சு, வட மாகாண சமூக சேவைகள் திணைக்களம் ஆகியவற்றின் நெறிப்படுத்தலிலும், மத்திய அரசின் சமூக சேவைகள் திணைக்களம், மாற்றுவலுள்ளோருக்கான தேசிய செயலகம், முதியோர்களுக்கான தேசிய செயலகம் என்பவற்றின் பங்குபற்றுதலுடன் இச்சேவை இடம்பெற்றுள்ளது.

மூக்குக் கண்ணாடி வழங்கல், மாற்றுத்திறனாளிகளுக்கான சுயதொழில் உதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான வீடு திருத்தம், மாற்றுத்திறனாளிகளுக்கான மலசலகூட வசதிகளை வழங்குதல், பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான சுயதொழில் உதவி, மாற்றுத்திறனாளிகளாக உள்ள பெற்றோர்களின் பிள்ளைகளுக்கான கல்வி உதவி, முதியோர் அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன், அமைச்சர் அனந்தி சசிதரன், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்திரம் அருமைநாயகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.