மஸ்கெலியா, நல்லத்தண்ணி பிரதான வீதியில் இன்று காலை ஜீப் வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் மதகுரு உட்பட மூவர் படுகாயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கத்திற்கு அருகில் 35 அடி பள்ளத்தில் வீழ்ந்து குறித்த ஜீப் ரக வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது.
படுகாயங்களுக்கு உள்ளான அனைவரும் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹியங்கனையிலிருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரை மேற்கொண்டு மீண்டும் மஹியங்கனை நோக்கி பயணித்த ஜீப் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதியால், வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணத்தினால் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.