சிவனொளிபாதமலைக்கு 3 இலட்சத்திற்கும் அதிகமான யாத்திரிகர்கள் வருகைத்தந்துள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு தினங்களாக வருகைத்தந்துள்ள பெருமளவிலான யாத்திரிகர்களால் நல்லத்தண்ணி பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரகாலமாக யாத்திரிகர்களின் வருகை அதிகரித்துள்ளதுடன் யாத்திரிகளின் நலன் கருதி விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அம்பகமுவ பிரதேச செயலகத்தினால் சுகாதர சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சிவனொளிபாதமலைக்கு வருகைத்தரும் பயணிகள் போதைப்பொருட்கள், வாத்தியக்கருவிகளைக் கொண்டுவருவதைத் தவிர்க்குமாறும் நல்லத்தண்ணி பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.