வவுனியாவில் தூக்கில் தொங்கிய இளைஞனின் காதலியும் தற்கொலை

Report Print Theesan in சமூகம்
336Shares

வவுனியாவில் 29 வதுடைய பெண்ணொருவர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா - கொரவப்போத்தானை வீதியில் அமைந்துள்ள (AFRIEL) அமைப்பின் விடுதியிலிருந்து இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டனர்.

இந்நிலையில் குறித்த இளைஞனின் காதலியும் இன்று காலை 10.30 மணியளவில் புதுக்குடியிருப்பில் உள்ள அவரது வீட்டு கிணற்றினுள் வீழ்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண்ணின் காதலன் தற்கொலை செய்தமையின் காரணமாக இப்பெண்ணும் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு 9ம் வட்டாரத்தினை சேர்ந்த 29 வயதுடைய ரஜீதா என்ற பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.