வெலிமடையில் கார் விபத்து! ஒருவர் உயிரிழப்பு

Report Print Thirumal Thirumal in சமூகம்
40Shares

வெலிமடை, போகஹகும்புர பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு விட்டு, பொரலந்தையிலுள்ள தமது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த காரொன்றே போகஹகும்புர பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள மண்மேடு ஒன்றில் மோதுண்டு இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் உயிரிழந்தவர் பொரலந்தை பகுதியை சேர்ந்த 63 வயதுடைய நபர் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்த மூவர் பொரலந்தை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சாரதியின் நித்திரையே குறித்த விபத்திற்கு காரணம் என விசாரணைகளை முன்னெடுத்து வரும் போகஹகும்புர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.