யாழ். மாவட்ட உருளைக்கிழங்கு அறுவடை விழா

Report Print Sumi in சமூகம்
183Shares

யாழ். மாவட்ட உருளைக்கிழங்கு உற்பத்தி, விற்னையாளர் மற்றும் கூட்டுறவு சமாசம் ஆகியன இணைந்து குப்பிளானில் இன்றைய தினம் உருளைக்கிழங்கு அறுவடை விழாவினை நடத்தியுள்ளன.

இந்த அறுவடை நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் தந்தையும், பிரத்தியேக செயலாளருமான சதாசிவம் இராமநாதன் கலந்து கொண்டு உருளைக்கிழங்கு அறுவடை விழாவினை ஆரம்பித்து வைத்துள்ளார்.

மேலும், இதன்போது கூட்டுறவு சாமச தலைவர் இ.தெய்வேந்திரம் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன், வட மாகாண விவசாய பணிப்பாளர் சி.சிவகுமார், கமநல அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் இ.நிசாந்தன் உடுவில் பிரதேச செயலாளர் மதுமதி வசந்தகுமார் மற்றும் விவசாயப் பெருமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.