வவுனியாவில் வேதாகமம் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா

Report Print Theesan in சமூகம்
170Shares

இலங்கை அப்பலோ வேதாகமம் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது பட்டமளிப்பு விழா நேற்று இடம்பெற்றது.

இது குறித்த நிகழ்வு, வவுனியா இறம்பைக்குளம் ஈஸி மிசன் பூரண சுவிஸேச சபை ஆலயத்தின் பிரதான ஆயர் பி.எம். இராஜசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

இப்பட்டமளிப்பு விழாவில் 12 பேருக்கு இளநிலைப்பட்டமும், 14 பேருக்கு முதுநிலை பட்டமும், இரண்டு கௌரவ வைத்தியர் சேவைக்கான பட்டமும், வன்னிப்பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு சமூதாய முன்னேற்றப்பணிக்கான சிறப்பு பரிசும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் அப்பலோ வேதாகமப் பல்கலைக்கழகத்தின் தலைவர், துணைத்தலைவர், பேராசிரியர்கள், நிர்வாகத் தலைவர்கள், உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.