கொட்டாவையில் வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து

Report Print Aasim in சமூகம்
51Shares

கொட்டாவை நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று பிற்பகல் பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

வௌிநாடுகளில் இருந்து இயந்திரங்கள் மற்றும் கருவிகளை இறக்குமதி செய்து விநியோகிக்கும் வர்த்தக நிலையம் ஒன்றே இவ்வாறு தீப்பற்றியுள்ளது.

இதனையடுத்து கொழும்பு மாநகரசபை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

எனினும் வர்த்தக நிலையத்தின் ஒருபகுதி தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளது. தீவிபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

கொட்டாவை பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.