தியத்தலாவையில் வெடித்த கைக்குண்டு மிகப்பழைமையானது?

Report Print Aasim in சமூகம்

தியத்தலாவையில் பேருந்து ஒன்றுக்குள் வெடித்த கைக்குண்டு மிகப்பழைமையானதாக இருக்கக் கூடும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த கைக்குண்டு பூமிக்கடியில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டிருக்கலாம் என்றும், அவ்வாறு புதைக்கப்பட்டிருந்த காரணத்தினால் கைக்குண்டின் பாதுகாப்பு வளையம் துருப்பிடித்து பலமிழந்து காணப்பட்டிருக்கக் கூடும் என்றும் பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

அதன் காரணமாகவே கீழே விழுந்தவுடன் கைக்குண்டின் பாதுகாப்பு வளையம் கழன்று கைக்குண்டு வெடித்திருக்க முடியும் என்றும் பொலிஸ் விசாரணைக்குழுவினர் தெரிவித்துளளனர்.

எனினும் சம்பவம் தொடர்பாக தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் , இதுவரை மேலதிக தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.