கொத்மலை நீர்தேக்க பகுதியில் போக்குவரத்திற்கு தடை

Report Print Thirumal Thirumal in சமூகம்
74Shares

கொத்மலை நீர்தேக்கத்தின் அணைக்கட்டிற்கு மேலால் வாகனங்கள் பயணம் செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி இன்றைய தினம் முதல் 3 நாட்களுக்கு இவ்வாறு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக நீர்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

அணைகட்டில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியவசிய பராமரிப்பு வேலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனால், அணைகட்டின் மேல் பயணம் செய்வது மட்டுமல்லமால் நீர்தேக்கத்தை பார்வையிட வருவதையும் தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.