தாயை இழந்து தந்தையின் அரவணைப்பின்றி வாழும் மாணவர்களை தேடிச் சென்ற மனித நேயம்

Report Print Dias Dias in சமூகம்
216Shares

மட்டக்களப்பு - வாழைச்சேனை, கிண்ணையடி பகுதியில் தாயை இழந்து தந்தையின் அரவணைப்பின்றி வாழும் மாணவர்களுக்கு உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

கோறளைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினரும் சமூக சேவையாளருமாகிய இரத்தினம் நேசன் அவர்கள் இம் மாணவர்களுக்கு உதவி வழங்கியுள்ளார்.

கிண்ணையடி - சுங்கான்கேணியைச் சேர்ந்த குறித்த மாணவர்களின் கற்றலுக்கு தேவையான உபகரணங்கள் உட்பட மேலதிக வகுப்புக்குச் செல்வதற்கான ஆடைகளும் வழங்கப்பட்டன.

அத்தோடு, தரம் 5இல் கல்வி கற்கும் மாணவனுக்கு வாழைச்சேனைக்கு வந்து கல்வி கற்பதற்கான முச்சக்கர வண்டியும், மேலதிக வகுப்பிற்கான ஏற்பாடும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.