அதிகாலையில் அத்துமீறிய மர்ம நபர்கள்! இளம் தாய் மருத்துவமனையில்...

Report Print Aasim in சமூகம்
654Shares

மாதம்பை அருகே பிள்ளைகளுடன் தனியாக வீட்டில் இருந்த பெண்ணொருவரை மர்மநபர்கள் கத்திமுனையில் வன்புணர்வுக்கு உட்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

மாதம்பை பிரதேசத்தில் உள்ள சுதுவெல்ல பிரதேசத்தில் இன்று அதிகாலை நான்கு மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

அப்பகுதியில் வசித்த 25 வயதான இளம் பெண் ஒருவரே கத்திமுனையில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அவருக்கு எட்டு வயது மற்றும் மூன்றரை வயதில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

கணவர் தனியார் நிறுவனமொன்றில் சாரதியாக கடமையாற்றும் நிலையில் அவர் வீட்டில் இல்லாத சமயம் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

அதிகாலை நான்கு மணியளவில் வீட்டின் கதவை உடைத்து உட்புகுந்துள்ள மர்மநபர்கள் இரண்டு ​பேர் கத்திமுனையில் குறித்த பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட பெண் தன் கணவருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்துவிட்டு பொலிசாருக்கும் புகார் தெரிவித்துள்ளார்.

தற்போது பாதிக்கப்பட்ட பெண் சிலாபம் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.