வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு காலியில் மீட்பு

Report Print Aasim in சமூகம்
65Shares

காலி - ஹபராதுவை , கட்டுகுருந்தை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் இருந்து புதைத்து வைக்கப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த காணியை, காணி ஏல விற்பனை மூலம் வாங்கிய பொறியியலாளர் ஒருவர் காணிக்குள் தென்னங்கன்றுகளை நாட்டுவதற்காக இன்றைய தினம் குழிதோண்டிய நிலையில் கைக்குண்டொன்றைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

உடனடியாக அப்பிரதேசத்துக்கு பாதுகாப்பை பலப்படுத்திய பொலிஸார், இராணுவத்தின் குண்டு செயலிழக்கும் பிரிவை வரவழைத்து குண்டை செயலிழக்க வைத்துள்ளனர்.

இதேவேளை, அதனைப் பரிசோதித்த பொலிஸாரும், இராணுவத்தினரும், குறித்த கைக்குண்டு வெளிநாடொன்றில் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் குறிப்பிட்டுள்ளனர்.