சட்டவிரோதமான முறையில் எடுத்து வரப்பட்ட பெருந்தொகை சிகரெட்டுகளை இன்று சுங்கப் பிரிவினர் பறிமுதல் செய்து அரசுடைமையாக்கியுள்ளனர்.
இன்று காலை டுபாயில் இருந்து கொழும்புக்கு வந்த விமானத்தில் இளைஞர் ஒருவர் மீது சந்தேகம் கொண்ட சுங்கத்துறையினர் அவரை தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதன்போது குறித்த வாலிபர் எடுத்து வந்த பயணப்பொதிகளில் சுமார் 20 ஆயிரம் சிகரெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் சந்தைப் பெறுமதி பத்து லட்சம் ரூபாவாகும். சட்டவிரோத சிகரெட்டுகளை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் அவற்றை அரசுடைமையாக்கியுள்ளனர்.
மேலும் அவற்றை திருட்டுத்தனமாக எடுத்துவர முனைந்த நீர்கொழும்பைச் சேர்ந்த வாலிபருக்கு 25 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்துள்ளனர்.