முல்லைத்தீவில் மக்கள் தொகை குறைவாக இருப்பதால் சந்தைகளை இயக்குவதில் சிக்கல்கள்

Report Print Yathu in சமூகம்
79Shares

மக்கள் தொகை குறைவாக காணப்படுவதுடன், விவசாயக் கிராமங்கள் என்பதனால் சந்தைகளை இயக்குவதில் நெருக்கடி நிலை காணப்படுவதாக முல்லைத்தீவு மாந்தை கிழக்குப் பிரதேச சபையினுடைய செயலாளர் பி.சிவபாலராஜா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2009ம் ஆண்டு பொன்னகர் பகுதியில் நவீன வசதிகளைக் கொண்ட சந்தைக் கட்டடத் தொகுதியும், பாண்டியன்குளம் பொதுச் சந்தை பல மில்லியன் ரூபா செலவிலும் புதிதாக நிர்மானிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு திறந்து வைக்கப்பட்ட இரு சந்தைகளும் இயங்காத நிலையில் காணப்படுகின்றது.

இந்த நிலையில், இரண்டு சந்தைகளையும் இயங்க வைப்பதற்கு உரிய தரப்புக்கள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் மாந்தை கிழக்குப் பிரதேச சபையின் செயலாளரை தொடர்புகொண்டு கேட்டபோது, பாண்டியன்குளம் பொதுச் சந்தை, பொன்னகர் பொதுச்சந்தை, ஆகியன மீள்குடியேற்றத்தின் போது நீண்டகால நோக்கோடு அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதேச சபையினால் சந்தைகள் மூடப்பட்டவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பொன்னகர் பொதுச்சந்தையில் கடைகள் கேள்வி கோரல் மூலம் வழங்கப்பட்டன. சந்தைக் கட்டடத் தொகுதியும் பத்திரிகைகள் மூலம் கேள்வி கோரல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஆனால், எவரும் எடுக்கவில்லை. இதேபோல பாண்டியன்குளம் பொதுச் சந்தை கேள்விகோரல் விடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இங்கு மக்கள் தொகை குறைவாக இருப்பதனாலும் விவசாயக்கிராமம் என்பதனாலும் சந்தைகளை இயக்குவதில் சிக்கல்கள் காணப்படுவதாகவும் பி.சிவபாலராஜா குறிப்பிட்டுள்ளார்.